யேர்மனியில் சீனத் தூதரகம் புலி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது

இலங்கையில் உடனடி `யுத்த நிறுத்தம்` கோரி யேர்மனியில் ஆர்ப்பாட்டம் செய்த புலி ஆதரவாளர்கள் சிலர் பேர்லினில் உள்ள சீனத் தூதரகம் மீது இன்று (ஏப். 24) மதியம் தாக்குதல் நடத்தி உள்ளனர். சீன அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு சீன தூதரகத்தை முற்றுகையிட்ட சுமார் நூற்றுக்கணக்கான ஜேர்மன் வாழ் புலி ஆதரவாளர்கள் தூதரக கட்டிடத்தை நோக்கி சரமாரியான முட்டைகளை எறிந்துள்ளனர்.

மேலும் சிலர் சீன தூதரகத்துக்கு முன்னுள்ள தேசியக் கொடிக் கம்பத்தை முறிக்க முயன்ற வேளை பேர்லின் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். யேர்மன் காவற் துறையினரால் இந்த வன்முறையில் ஈடுபட்ட புலி ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பேர்லினில் பிறிதொரு இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர்தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்த ஆர்ப்பாட்டத்தை உலங்கு வானூர்த்தி மூலம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்த பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

புலிகளின் பிடியிலிருந்து வெளியேறி இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை நோக்கி வந்த லட்சக்கணக்கான மக்கள் சொல்லும் செய்திகள் எதனையும் கிஞ்சித்தும் கருத்திலெடுக்காத `இந்தப் புலி ஆதரவாளர்கள் ஆடாவடித்தனம் எல்லை மீறிவிட்டதாக` ஜேர்மன் பிரஜை ஒருவர் அங்குள்ள வானொலி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply