இறந்துவிட்டதாக கூறி உயிருடன் இருந்த குழந்தையை பார்சல் செய்து கொடுத்த டெல்லி அரசு ஆஸ்பத்திரி

டெல்லியை சேர்ந்த இளம்பெண் சாந்திதேவி (வயது 28). இவர் கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் சப்தர்ஜங்கில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அவருக்கு குழந்தை பிறந்தது. இந்த குழந்தை குறை மாத பிரசவமாக பிறந்திருந்தது. இதானால் 460 கிராம் எடை மட்டுமே இருந்தது. அந்த குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினார்கள். பின்னர் பிளாஸ்டிக் பையில் பார்சல் செய்து குழந்தையை கொடுத்து அனுப்பினார்கள்.

அதை வீட்டுக்கு கொண்டு சென்று இறுதிசடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனார். இதற்காக குழந்தையை பார்சலில் இருந்து பிரித்து எடுத்தனர். அப்போது குழந்தை கை, கால்களை ஆட்டிக் கொண்டு உயிருடன் இருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அதே ஆஸ்பத்திரியில் கொண்டுவந்து சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறை பிரசவமாக பிறந்ததுடன் எடையும் மிக குறைவாக இருப்பதால் அந்த குழந்தை உயிரை காப்பாற்றுவது கடினம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிருடன் இருந்த குழந்தையை இறந்துவிட்டதாக கூறி அனுப்பியதால் இது சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply