வெள்ளை சுறாவோடு நீச்சல் போட்டிக்கு தயாராகும் மைக்கேல் ஃபெல்ப்ஸ்
எல்லா காலத்திலும் மிகவும் வெற்றிகரமான ஒலிம்பிக் சாம்பியன் என்று கருதப்படும் மைக்கேல் ஃபெல்ப்ஸ், ஜூலையில் நடைபெற இருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக மிகப் பெரிய வெள்ளை சுறாவோடு போட்டி ஒன்றில் பங்கேற்கவுள்ளார்.நீச்சலில் ஜாம்பவானாக உலக அளவில் கொண்டாடப்படும் தடகள வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ், கடலில் மிகவும் திறமையாக வேட்டையாடும் சுறாவோடு போட்டியிட இருப்பதாக டிஸ்கவரி சானல் தொலைக்காட்சியின் செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 வயதாகும் ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் மட்டும் 23 தங்கப்பதக்கங்களை பெற்று 2016 ரியோ ஒலிம்பிக்கிற்கு பின்னர் ஓய்வு பெற்றுள்ளார்.
நீந்துகின்றபோது, அதிகபட்சமாக மணிக்கு 6 மைல் வேகத்தில் செல்லும் திறனுடையவர் அமெரிக்காவின் தடகள விளையாட்டு வீரரான மைக்கேல் ஃபெல்ப்ஸ்.ஆனால், மிகப் பெரிய வெள்ளை சுறா மணிக்கு 25 மைல் வேகத்தில் நீந்தக்கூடியதாகும்.
ஃபெல்ப்ஸ் , வெள்ளை சுறா – யார் வெல்வார்?
“ஃபெல்ப்ஸ் Vs சுறா: அதிக தங்கமகன் Vs பெரிய வெள்ளை சுறா” என்கிற தலைப்பிலான டிஸ்கவரி சானல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஜூலை 23 ஆம் நாள் தொடங்குகின்ற “சுறா வாரம்” நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக அமையும்.
“எத்தகைய போட்டியாக இது அமையும் என்பதை அனைவரின் ஊகத்திற்கு விடுவதாக ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு சொசைட்டியை சேர்ந்த டூனி மக்டோ தெரிவித்திருக்கிறார். யார் வெற்றி பெறுவார்கள் என்பது முன்கூட்டியே தெரிந்த முடிவு என்று அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
“ஒலிம்பிக் போட்டி நடத்தப்படும் அளவிலான நீச்சல் குளத்தில் மைக்கேல் ஃபெல்ப்ஸூம், மிகப் பெரிய வெள்ளை சுறாவும் போட்டியிடுவது போல் இந்த போட்டி அமையப் போவதில்லை என்று நாம் நிச்சயம் உறுதியாக இருக்கலாம்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்,
“மில்லியன் கணக்கான ஆண்டுகளாக பரிணமித்து, கடல் சுற்றுச்சூழலுக்கு கச்சிதமாக தன்னை தகவமைத்திருக்கும் ஓர் உயிரினத்தோடு, மனித உடலை ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமையும் என எண்ணுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply