பாலியல் வன்முறை: இலங்கை முகாமில் இருந்த ரோஹிஞ்சா பெண் புகார்
இலங்கையில் தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிஞ்சா முஸ்லிம் பெண்ணொருவர் போலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தலைநகர் கொழும்புக்கு வெளியேயுள்ள மீரிகான சட்ட விரோத தடுப்பு முகாமில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளிட்ட மியன்மார் நாட்டை 30 ரோகிஞ்சா முஸ்லிம் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான 22 வயதான பெண்ணொருவர் தனது நோயின் காரணமாக அரச மருத்துவமனையொன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்தார்.
3 நாட்களுக்கு முன்னர் சிகிச்சை முடிந்து அழைத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் ஒரு கான்ஸ்டபிளால் விடுதியொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக கொகுவல போலிசிடம், பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளரான மூத்த சட்டத்தரணி ஒருவர் தெரிவிக்கின்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply