பிரசெல்ஸ் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக்கொலை
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசெல்ஸ் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு பெல்ட்டுடன் நுழைந்து சிறிய வெடிவிபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்ஸில் உள்ள முக்கிய மத்திய ரெயில் நிலயத்தில் நேற்று நுழைந்த நபர் சிறிய அளவிலான வெடிவிபத்தை ஏற்படுத்தினார். இதனால், ரெயில் நிலையத்தின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிந்தது. உடனே, அங்கிருந்த போலீசார் அந்நபரை சுட்டுக்கொன்றனர்.
அந்த நபர் தன்னுடைய உடலில் வெடிகுண்டுகள் அடங்கிய பெல்ட்டை எடுத்துவந்துள்ளார். இதனையடுத்து, போலீசார் அந்த குண்டுகளை செயலிக்க செய்தனர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயமில்லை என தெரிவித்துள்ள போலீசார், அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்தாண்டு மார்ச் மாதம் இதே நகரில் உள்ள விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply