பிரபாகரன் கடல் நீருக்குள் ஓடக்கூடிய ஸ்கூட்டர் வகையான சிறியரக ‘சப்மறின்’ மூலம் தப்பி ஓடலாம் : கட்டளைத் தளபதி சவேந்திர டி சில்வா

முல்லைத்தீவுக்கு இன்று (ஏப். 24) விஜயம் செய்த உள்நாட்டு மற்றும் சர்வதேச பத்திரிகையாளர்கள் சிலருக்கு கருத்துத் தெரிவித்த 58வது படையணியின் கட்டளைத் தளபதி பிரிக்கேடியர் சவேந்திர டி சில்வா, பிரபாகரன் சிறியரக ‘சப்மறின்’ மூலம் யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்து தப்பி ஓடக் கூடும் என்று தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயத்தில் தனது மகன் சார்ள்ஸ் அன்ரனி, புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான், கடற் புலிகளின் பொறுப்பாளர் சூசை ஆகியோருடன் தற்போது இருக்கும் பிரபாகரன் கடைசிக் கந்தாயத்தில் ‘சப்மறின்’ மூலம் தப்பிச் செல்லக் கூடும்.

அண்மையில் இராணுவத்திடம் சரணடைந்த தயா மாஸ்ரர் தெரிவித்த தகவல்களின் அடைப்படையில் தான் இந்தக் கருத்தை தெரிவிப்பதாக 58வது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர டி சில்வா சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு கூறியுள்ளார். வெள்ளாம் முள்ளி வாய்க்கால் பகுதியில்  சார்ள்ஸ் அன்ரனி, பொட்டு அம்மான், சூசை ஆகியோரோடு தங்கியிருக்கும் பிரபாகரன் இறுதி நேரத்தில் தப்பிச் செல்லும் நோக்கத்தோடு கடல் நீருக்குள் ஓடக்கூடிய ஸ்கூட்டர் வகையான சிறியரக `சப்மறின்` வைத்திருக்கக் கூடும் எனவும் தெரிவித்தார்.

பொட்டு அம்மாம், சூசையை தவிர பிரபாகரன் நிலைப்பாட்டுடன் தற்போது ஒத்துப்போக புலிகளின் எந்த மட்டத்திலும் யாரும் இருக்க மாட்டார்கள். தற்போது பிரபாகரனுடம் யுத்த சூனிய பிரதேசத்திலுள்ள உள்ள புலிகளின் கீழ் நிலைத் தலைமைகள் சந்தர்ப்பம் கிடைத்தால் இராணுவத்திடம் சரணடையவே விரும்புவார்களெனவும் தெரிவித்தார்.

2002-05 சமாதான பேச்சு வார்த்தைக் காலகட்டத்தில் புலிகள் நோர்வேயிலிருந்து கடல் நீருக்குள் ஓடக்கூடிய ஸ்கூட்டர் (Underwater Scooter) வகையான சிறியரக `சப்மறின்` வன்னிக்கு கொண்டு வந்ததாக நம்பகமான வட்டாரங்கள் முன்பு செய்திகள் வெளியிட்டு இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply