காணாமல்போனோர் அலுவலகம் வடக்கில் அமைக்கப்பட வேண்டும் : இரா.சம்பந்தன்
காணாமலாக்கப்பட்டோ அலுவலகம் பற்றிய சட்டம் தாமதமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று சபையில் வலியுறுத்திய எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் வட மாகாணத்தின் வன்னி பகுதியில் அந்த அலுவலகம் அமைக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.பாராளுமனத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம்(தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) திருத்தச்சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினை தாபிக்கும் சட்டத்தினை தற்போது வரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனை இட்டு நாம் கவலை அடைகின்றோம்.
ஒருவர் காணாமலாக்கப்படுவதானது குற்றம் என்பதற்கு அப்பால் அது கொலைக் குற்றமாகும். ஒருவர் கொலை செய்யப்படும்போது தெளிவாக கொலை செய்யப்பட்டார் என்பதை அறிந்து கொள்ளமுடியும். அதன் பிரகாரம் அதற்கு காரணமானவரை சட்டரீதியாக தண்டிக்கலாம்.
ஆனால் ஒருவர் காணமலாக்கப்படும் போது அதற்கு காரணமானவரை அறிந்து கொள்வதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. அவ்வாறு காணமலாக்கப்பட்ட சம்பவங்களுக்கு காரணமானவர்களை அறிவதற்காகவே இந்த சட்டம் அமுல்படுத்த வேண்டும் என்று கோருகின்றோம்.
வடக்கு கிழக்கில் பல ஆயிரக்கணக்கானவர்கள் காணமலாக்கப்பட்டார்கள் என்ற கருத்து காணப்படுகின்றது. 20ஆயிரம் பேர் காணமலாக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியம் அளித்துள்ளனர். இராணுவ தரப்பில் 5ஆயிரம் காணாமல்போனார்கள் என்றும் சாட்சியம் அளித்துள்ளனர்.
காணமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யப்படவேண்டும். சிவிலியன்களாக இருக்கலாம், இராணுவத்தினராக இருக்கலாம் காணமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் குறித்த உண்மைகளை கண்டறிய வேண்டும்.
காணமல்போனவர்கள் தொடர்பாக ஐ.நா தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு முன்னதாக இந்தசபையில் பல தடவைகளில் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என்று நாம் சுட்டிக்காட்டினோம். அரச தலைவர்களுடன் கலந்துரையாடினோம். சர்வதேச தரப்பினர்களுடன் கலந்துரையாடி வலியுறுத்தல்களைச் செய்தோம். ஆனால் தற்போது வரையில் எதுவும் நடைபெறவில்லை. தாமதம் காணப்படுகின்றது.
உறவுகள் காணாமலாக்கப்பட்டமையானது பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுயள்ளது. ஆகவே இந்த விடயம் மென்மேலும் தாமதப்படுத்தப்படக் கூடாது.
இதன் அலுவலகம் கொழும்பில் அமையப்போகின்றது. இந்த அலுவலகம் வடமாகாணத்தில் அமைய வேண்டும். விசேடமாக வன்னி பிரதேசத்திற்கு வவுனியாவில், கிளிநொச்சியில் இந்த அலுவலகம் காணப்படவேண்டும் என்று கோருகின்றோம்.
இந்த சட்டம் எப்போது அமுலுக்கு வரும் என்று கூறப்படவில்லை. இதற்கான அமைச்சர் இன்னமும் இனங்காணப்படவில்லை. ஆகவே அந்த விடயங்களில் உடனயாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் கோருகின்றேன்.
காணாமலாக்கப்பட்ட அலுவலகத்திற்கு நியமிக்கப்படுபவர்கள் அது தொடர்பான அனுபவத்தினை கொண்டிருக்க வேண்டும். இந்த அலுவலகத்திற்கு வருகை தருபவர்களுக்கு வேண்டிய உள ஆலோசனைகள், இழப்பீடுகள், வழங்குவதற்குரிய மனநிலை உடையவர்களாக இருக்கவேண்டும.
முறைப்பாட்டாளர்களின் கூற்றுக்கு அமைவாக வேண்டிய இடங்களில் சென்று விசாரணைகளை மேற்கொள்ளப்படுபவர்களாகவும் ஒருவேளை அவர்கள் புதைக்கப்பட்டு விட்டார்கள் என்றால் அங்கு சென்று கூட நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
எமது மக்களில் ஒரு பகுதியினர் காணாமலாக்கப்பட்டவர்கள் விடயம் குறித்து நாம் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என்று ஒரு பகுதியினர் குறிப்பிடுகின்றனர். உண்மையிலேயே நாம் பல்வேறு வலியுறுத்தல்களை செய்தும் அது தெடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு இரண்டு காரணம் காணப்படலாம்.
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படும் என்பது ஒன்றாகும். மற்றையது விடுதலைப்புலிகளுக்கு எதிராக போராடிய இராணுவத்தினர் சட்டத்திற்கு முன்னாள் நிறுத்தப்படுவார்கள் என்ற பிரசாரம் கூட்டு எதிர்க்கட்சியினரால் குற்றம் சாட்டு வருகின்றமையும் ஆகும்.
அவ்வாறான கருத்தில் எவ்விதமான உண்மையும் இல்லை. உண்மையிலேயே காணமலாக்கப்பட்ட உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதே இந்த அலுவலகத்தினை உருவாக்குவதற்கான பிரதான நோக்கமானதாகும்.
அதற்காகவே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் காலதாமதமின்றி காமணலாக்கப்பட்டவர்கள் குறித்த அலுவலகத்தினை உடனடியாக தாபிக்க வேண்டும். அந்த அலுவலகத்தின் அங்கம் நிச்சயமாக வடமாகாணத்தில் தாபிக்கப்படவேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply