முழங்காவில் பொலிஸ் நிலையம் பொது மக்களால் முற்றுகை

பதின்மூன்று வயது சிறுவன் உயிரிழக்க காரணமான விபத்துடன் தொடர்புடைய கார் சாரதியை கைது செய்யாததைக் கண்டித்து முழங்காவில் பொலிஸ் நிலையத்தை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.முழங்காவில் கரியாலை நாகபடுவான் தேவாலய திருவிழாவை முடித்துக் கொண்டு வீதிக்கு வந்த வேளையிலே கார் சிறுவன்மீது மோதியுள்ளது.

விபத்தையடுத்து கார் சாரதி தப்பியோடியுள்ளார்.

விபத்தில் காயமடைந்த சிறுவன் கோமா நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(21) நான்கு மணியளவில் உயிரிழந்துள்ளான்.

குறித்த விபத்துத் தொடர்பில் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாட்டு செய்யப்பட்டதுடன் தப்பி ஓடிய காரின் ஒரு இலக்கத்தகட்டை யும், அதன் இலக்கமும் பொலிஸாரிற்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும் பொலிசாரால் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இதைக்கண்டித்தே மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். கிராமமக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகள் நாச்சிக்குடா சந்தியில் இருந்து முழங்காவில் பொலிஸ் நிலையம் வரை பேரணியாகச் சென்று பொலிஸ் நிலையத்தை முற்றுகை இட்டனர். அதனை அடுத்து அங்கு வருகைதந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்தேக நபரை கைதுசெய்யும் நடவடடிக்கை நடைபெறுவதாகவும் விரைவில் சந்தேகநபர் கட்டாயம் கைது செய்யப்படுவாரென்றும் உத்தரவாதமளித்தார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply