அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சூரிய ஒளி தகடு பதித்த சுவர்: டிரம்ப் ஆலோசனை

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டப்படும் என டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.இதன் மூலம் மெக்சிகோ நாட்டினர் அமெரிக்காவில் நுழைந்து குடியேறுவதை தடுக்க முடியும். போதை பொருள் கடத்தலுக்கு முடிவு கட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானதும் மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதில் தீவிரமாக இருக்கிறார்.

சுமார் 2 ஆயிரம் மைல் தூரத்துக்கு சுவர் கட்ட குறைந்தது ரூ.6500 கோடி (1 பில்லியன் டாலர்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த செலவை ஈடுகட்டும் வகையில் பயனுள்ள யோசனைகள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டது.

அதை தொடர்ந்து கட்டப்படும் சுவர்களில் சூரிய ஒளி தகடு பதித்து அதன் மூலம் மின்சாரம் பெற முடியும் என பொதுமக்களும் கம்பெனிகளும் ஆலோசனை கூறி இருந்தனர்.

 

இதை பரிசீலித்த அதிபர் டிரம்ப்புக்கு இது நல்ல யோசனை என தெரிந்தது. எனவே மெக்சிகோ எல்லையில் புதிதாக கட்டப்படும் சுவரில் சூரிய ஒளி மின்சாரம் தகடுகள் பதிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் சுவரை ஒட்டியுள்ள மெக்சிகோ நாட்டின் நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்டவைகளுக்கு மின்சாரம் விற்பனை செய்ய முடியும் என்று கருதப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply