வடமாகாண சபை அவைத்தலைவராக சிவாஜிலிங்கம்

வடமாகாண சபையின் அவைத்தலைவராக எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பெயர் பேசப்பட்டு வருவதாக இணைய ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. வடமாகாணசபை அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் நடுநிலை தவறி செயற்பட்டுள்ளதாகவும், எனவே, அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்திருந்த மாகாணசபை உறுப்பினர்களான சர்வேஸ்வரன் மற்றும் விந்தன் கனகரட்ணம் ஆகியோர் இந்த கோரிக்கையை விடுத்திருந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை ஆளுநரிடம் கையளித்திருந்தார்.

இந்த விடயம் சட்டத்திற்கு முரணான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதாக இருந்தால் அவைத்தலைவரிடமே கையளித்திருக்க வேண்டும்.

எனினும், அதற்கு மாறாக முதலமைச்சருக்கு எதிராக அவைத்தலைவரே நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை ஆளுநரிடம் கையளித்திருந்தார். அத்துடன், பிரதி அவைத்தலைவரும் அந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டிருந்தார்.

இந்நிலையில், அவைத்தலைவர் மீது பலரும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், வடமாகாண சபையின் அவைத்தலைவராக எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பெயர் பேசப்பட்டு வருவதாக இணைய ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த விடயம் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் அவர்களை லங்காசிறி ஊடகம் தொடர்புகொண்டு கேட்ட போது, அவர் அதற்கு மறுப்பு வெளியிட்டிருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply