தேசத்தின் நல்லுறவை உலகிற்கு காட்டுவோம் எதிர்க் கட்சித் தலைவர் : சம்பந்தன்

எமது தேசத்தின் நல்லுறவிற்கான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துவதுடன், நாட்டின் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டவும் செயற்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள ஈதுல் பித்ர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.ரமழான் பண்டிகையானது மக்களிடையே சமாதானம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தினை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும் எனவும் அவர் பிரார்த்தித்துள்ளார்.

இலங்கை வாழ் அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் எனது இதயங்கனிந்த ஈதுல்பித்ர் பெருநாள் வாழ்த்துக்கள். புனித ரமழான் மாதத்தின் நிறைவினை நினைவுகூரும் முகமாக இந்த நாளை நாம் கொண்டாடுகின்றபோது, இப்பண்டிகையின் பாரம்பரியத்தை போற்றும் வகையில், சகோதரத்துவ உணர்வோடு தாம் பகிர்ந்துகொள்ளும் அதேவேளை இல்லாதவர்கள் மேல்காட்டும் கரிசனையையும் எமது சிந்தையில் கொள்வோமாக.

இந்தப் பெருநாளை கொண்டாடும் இத்தருணத்தில், எமது தேசத்தின் நல்லுறவிற்கான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துவதுடன், நாட்டின் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டவும் செயற்படுவோமாக.

இந்த ரமழான் பண்டிகையானது, எமது மக்களிடையே சமாதானம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தினை மேலும் வலுவாக்குவதாக அமைய வேண்டும் என பிராத்திக்கிறேன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply