இலங்கையில் அதிக சனத்தொகையை கொண்ட மேல் மாகாணசபை தேர்தலில் ஆழும்கட்சி பெரும் வெற்றி

இலங்கையில் அதிக சனத்தொகையினைக் கொண்டிருக்கும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணசபைக்காக சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு பெரும் வெற்றியீட்டியிருகிறது. தேர்தல் முடிவுகளின்படி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு 65 சதவீதமான வாக்குகளைப்பெற்று சுமார் 68 இடங்களை பெற்று வெற்றி பெற்றிருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சி 30 சதவீதமான வாக்குகளைப்பெற்று 30 இடங்களை பெற்றிருக்கிறது.

மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி இந்தத் தேர்தலில் 3 இடங்களையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு இடங்களையும், ஜனநாயக ஐக்கிய முன்னணி ஒரு இடத்தையும் வென்றிருக்கிறது.

கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மத்தி, பொறளை, கொழும்பு கிழக்கு, கொழும்பு வடக்கு, கொழும்பு மேற்கு போன்ற தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றிருந்தாலும், ஏனைய பகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply