மன்னார் வர்த்தகர்களிடம் வவுனியாவில் இருந்து தொலை பேசி மூலம் கப்பம் கேட்டு மிரட்டல்; தர மறுக்கும் பட்சத்தில் கொலை எச்சரிக்கை

மன்னார் பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வர்த்தகர் பலரிடம் தொலைபேசி மூலம் பல இலட்சம் ரூபா வரை கப்பப்பணமாக கேட்கப்பட்டு வருவதாக வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக இனம் தெரியாதோரினால் பல இலட்சம் ரூபாய் கப்பம் கேட்கப்பட்ட வர்த்தகர் ஒருவர் தெரிவிக்கையில் , நான் மன்னார் பஸார் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றேன். முதலில் எனது கடைக்கு தொலை பேசி மூலம் அழைப்பு ஒன்று வந்தது.

அதில் குறிப்பிட்ட கப்பக்காரர்கள் வவுனியாவில் இருந்து கதைப்பதாகவும் தங்களுக்கு 10 இலட்சம் ரூபாய் கப்பப் பணமாக செலுத்த வேண்டும் எனவும் தர மறுக்கும் பட்சத்தில் சுட்டுக்கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் குறிப்பிட்ட வர்த்தகர் தெரிவித்தார்.

இது பேன்றே பல வர்த்தகர்களிடம் பல இலட்சம் ரூபா கப்பப்பணம் கேட்கப்பட்டிருப்பதாக்வும் அச்சம் காரணமாக பொலிஸில் முறையிடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply