குணசித்திர நடிகர் சண்முகசுந்தரம் காலமானார்
குணசித்திர நடிகர் சண்முகசுந்தரம் இன்று (ஆகஸ்ட் 15) காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. கரகாட்டக்காரன், மவுனகீதம், தாவணி கனவுகள், நானே ராஜா நானே மந்திரி உட்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.100-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருந்தாலும் கரகாட்டக்காரன் படத்தில் நடிகை கனகாவுக்கு தந்தையாக நடித்ததில் அவருக்கு நல்ல பெயரும் புகழும் கிடைத்தது.
சிவாஜி கணேசன் தொடங்கி இளம் தலைமுறை நடிகர்கள் வரை பலருடன் அவர் நடித்திருக்கிறார்.
இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்நாதன், இளையராஜா ஆகியோரின் இசைக்குழுக்களில் பாடகராக இருந்துள்ளார்.
கடந்த சில காலமாகவே அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் இருவரும், டப்பிங் கலைஞர்களாக உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply