இந்திய – சீன வீரர்கள் மோதல் குறித்து தகவல் தெரியாது – சீன வெளியுறவு அமைச்சகம்

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்கள் மோதியதாக வெளியான செய்தி குறித்து தகவல்கள் தெரியாது என சீன வெளியுறவு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள பான்காங் ஏரிக்கரையையொட்டி நேற்று காலை 6 மணிக்கு சீன படைகள் இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சி மேற்கொண்டன. உடனே அங்கு பாதுகாப்புக்கு இருந்த இந்திய வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் காலை 9 மணிக்கு மற்றொரு பகுதியில் மீண்டும் சீன படைகள் ஊடுருவ முயன்றன. இதனால் இந்திய வீரர்கள் மனித சங்கிலி போல அணிவகுத்து அரணாக நின்று அவர்களின் முயற்சியை முறியடித்தனர்.

அப்போது, சீன வீரர்கள், இந்திய வீரர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், உடனே இந்திய வீரர்களும் கற்களை வீசி பதில் தாக்குதல் நடத்தியதாகவும் செய்திகள் வெளியானது. இருப்பினும், இந்தியா – சீனா எல்லையை பாதுகாத்து வரும் இந்தோ-சீன எல்லைப் பாதுகாப்பு படை தரப்பில் எந்தஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை, ராணுவம் இது தொடர்பாக பேச மறுத்துவிட்டது.

இந்நிலையில், லாடக் ஊடுருவல் முயற்சி தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹூ சாங்யிங்கிடம் கேள்வி எழுப்பட்டது. அவர் பதிலளிக்கையில், ”இதுதொடர்பான தகவல்கள் எனக்கு தெரியாது என்றார். இந்தியா – சீனா எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதையே சீனா விரும்புகிறது. உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின்படி இந்தியா நின்றுக் கொள்ளவேண்டும், இதுதொடர்பான இருதரப்பு சந்திப்பு நடைபெற வேண்டும்” என கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply