இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம்: முதல்வர் கருணாநிதி

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி அண்ணா சமாதி அருகே முதல்வர் கருணாநிதி இன்று அதிகாலை திடீரென காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.இன்று காலை 6.00 மணிக்கு அண்ணா சமாதிக்கு வந்த அவர் அங்கு பேரறிஞருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திடீரென உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி உண்ணாவிரதம் இருந்து வரும் கருணாநிதியின் அருகிலேயே படுக்கையும் போடப்பட்டுள்ளது. அவரது மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோரும் உடன் அமர்ந்துள்ளனர். இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை மதுரை நாடாளுமன்ற வேட்பாளரான அழகிரியும் மதுரை மேல்மாசி வீதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.உண்ணாவிரதம் நடக்குமிடத்தில் அமைச்சர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply