கடந்த 2 ஆண்டுகளில் ஐரோப்பாவில் 17 தாக்குதல்கள் நடத்திய ஐ.எஸ்.தீவிரவாதிகள்

ஈராக் மற்றும் சிரியாவில் தாக்குதல்களை நடத்தி தனிநாடு அமைத்து இருந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றனர். அவர்களை அழிக்க அமெரிக்கா தீவிர நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவளிக்கின்றன. எனவே ஐரோப்பா கண்டத்தின் மீது இவர்களின் கொலை வெறி பார்வை விழுந்துள்ளது.

அதன் எதிரொலியாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஐரோப்பிய நாடுகளில் 17 தாக்குதல்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர்.

அதில் பிரான்சில் மட்டும் 6 பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதே போன்று 3 முறை இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியிலும், 2 தடவை ஸ்பெயின் நாட்டிலும், தலா ஒரு முறை பெல்ஜியம் மற்றும் சுவீடனில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இவர்களின் கொலை வெறி தாக்குதல்களுக்கு 364 அப்பாவிகளின் உயிர் பரிதாபமாக பறிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 மடங்குக்கு மேற்பட்டோர் படுகாயத்துடன் உயிர் பிழைத்துள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் படாக்லான் அரங்கில் இசை நிகழ்ச்சியின் போது தாக்குதல் நடத்தியதில் 90 பேர் பலியாகினர். 200 பேர் காயம் அடைந்தனர். அதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தற்போது ஸ்பெயின் பார்சிலோனாவை தொடர்ந்து பின்லாந்தின் துர்குவில் நடத்திய கத்தி குத்து சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply