குழந்தை பிறப்பதற்கு முன்னரே விற்பனை செய்ய முயற்சித்த யுவதி

வைத்­தி­ய­சா­லையில் பிர­ச­வத்­துக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த யுவதி ஒருவர் தான் பிர­ச­விக்­க­வி­ருக்கும் குழந்­தையை விற்­பனை செய்ய முயல்­வ­தாக நாவ­லப்­பிட்டி பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற இர­க­சிய தக­வ­லை­ய­டுத்து குறித்த பெண்­ணிடம் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டதில் குறித்த யுவதி கொழும்பில் வீடொன்றில் வேலை செய்தபோது வீட்டு எஜமான் தனக்கு தினமும் மயக்க மருந்து கொடுத்து வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் விசா­ர­ணை­களை பொலிஸார் மேற்­கொண்டபோது குறித்­த ­யு­வதி பிர­ச­வத்­துக்கு அனு­மதி பெறு­வ­தற்­காக வழங்­கிய வதி­விட முக­வரி பெயரும் போலி­யா­னது என தெரி­ய­வந்­துள்­ள­தோடு தன்னை தான் வேலை­செய்த வீட்டு எஜமான் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறி­ய­மையும் பொய்­யென உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட்டுள்­ளது.

குறித்த பெண் மஸ்­கெ­லிய பகு­தியைச் சேர்ந்த திரு­ம­ண­மா­காத 23 வய­தா­னவர் என்­பதும் இவரின் தங்கை வெளி­நா­டொன்­றுக்கு வேலை­வாய்ப்பு பெற்றுச் சென்­றி­ருந்த சமயம் தங்­கையின் கண­வ­ருடன் ஏற்­பட்ட தகாத உறவின் மூலமே கர்ப்பமுற்றிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply