ரெலோவில் இருந்து அமைச்சர் பீ.டெனிஸ்வரன் இடைநிறுத்தம்

வட மாகாண சபையின் போக்குவரத்து அமைச்சர் பீ. டெனிஸ்வரன் தனது டெலோ கட்சியிலிருந்து 6 மாத காலத்திற்கு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வவுனியாவில் இடம்பெற்ற டெலோ கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக செயற்பட்டமை உற்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னரே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக டெலோ கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கிரிஷாந்தா தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply