குடல் இறக்கம், காது-மூக்கு-தொண்டைக்கு ஆபரேசன் செய்யும் ரோபோ: இங்கிலாந்து விஞ்ஞானிகள் சாதனை

‘ரோபோ’ எனப்படும் எந்திர மனிதனின் செயல்பாடுகள் பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது மனிதர்களின் உடலில் ஆபரேசன் செய்யும் வகையில் புதிதாக ‘ரோபோ’ தயாரிக்கப்பட்டுள்ளது. மிக சிறியதாக இருக்கும் இந்த ‘ரோபோ’வை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கேம்பிரிட்ஜ் பகுதியில் 100 விஞ்ஞானிகள் மற்றும் என்ஜினீயர்கள் இணைந்து இரவு-பகலாக அயராது பாடுபட்டு இதை வடிவமைத்துள்ளனர்.

இது மனித கைகள் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘எவர்சியஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை குடல் இறக்கம் சீரமைப்பு, கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட ஆபரேசன் செய்ய பயன்படுத்த முடியும்.

இந்த ‘ரோபோ’ மூலம் குறைந்த விலையில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டாக்டர்கள் உதவியுடன் ஆபரேசன் தியேட்டரில் உள்ள ‘3டி’ திரையின் மூலம் இந்த ஆபரேசனை நிபுணர்கள் நடத்திக் காட்டினர். இது பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாக கேம்பிரிட்ஜ் நிபுணர்கள் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply