துணை முதல்வராக ஓ.பி.எஸ் பதவியேற்றார்: மாபா பாண்யராஜன் அமைச்சராக பதவியேற்பு
அ.தி.மு.க.வின் இரண்டு முக்கிய அணிகளான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகள், நீண்ட இழுபறிக்குப் பிறகு இன்று ஒன்றிணைந்தன. இணைப்புக்கு பின்னர், கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழு அமைக்கப்பட உள்ளது. மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நிதித்துறை, வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மாபா பாண்டியராஜனுக்கு தொல்லியல்துறை, தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு கால்நடைத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாலகிருஷ்ண ரெட்டிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.சி.சம்பத் வசம் இருந்த சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை சி.வி.சண்முகத்துக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இணைப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் புறப்பட்டனர்.
புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், மாபா பாண்டியராஜன் அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply