ரெலோவின் பரிந்துரையைப் புறந்தள்ளி அமைச்சராக குணசீலனை நியமிக்க விக்கி தீர்மானம்
ரெலோ சார்பில் க.விந் தனை அமைச் சராக நிய மிக்குமாறு அந்தக் கட்சி பரிந்துரைத்துள்ள போதும் அதனைப் புறந் தள்ளிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ரெலோவின் உறுப்பினரான ஜி.குண சீலனை சுகாதார அமைச் சராக நியமிக்குமாறு ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு கடிதம் அனுப்பி யுள்ளார்.
வடக்கு மாகாண அமைச் சர்கள் த.குருகுலராசா, பொ.ஐங்கரநேசன் இருவரும் முதலமைச்சரின் விசாரணைக் குழுவால் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்ட பின்னர், ஒட்டுமொத்த அமைச்சரவையுமே மாற்ற வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அதில் விடாப்பிடியாகவும் நின்று கொண்டார்.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சியைப் பழிவாங்குகின்றார் என்று தெரிவித்து அந்தக் கட்சி, வடக்கு அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்ற முடிவை எடுத்தது. வடக்கு அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்த ப.சத்தியலிங்கம் தனது பதவியிலிருந்து விலகும் முடிவை முதலமைச்சருக்கு அறிவித்தார். அதனை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார்.
மற்றொரு அமைச்சரான பா.டெனீஸ்வரன் அமைச்சுப் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். அதனால் அவரை ரெலோவிலிருந்து ஆறு மாதங்கள் இடைநிறுத்துவதாகவும், தமது கட்சி சார்பில் க.விந்தனை அமைச்சராக நியமிக்குமாறும் முதலமைச்சரிடம் கோரியிருந்தது. ஆனாலும் அந்தக் கட்சியினுள் ஜி.குணசீலனை நியமிக்க வேண்டும் என்று ஒரு தரப்பு வேண்டுகோள் முன்வைத்திருந்தாலும், கட்சியின் இறுதி முடிவாக க.விந்தனே பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ரெலோவின் முடிவைப் புறந்தள்ளி, ஜி.குணசீலனை சுகாதார அமைச்சராக நியமிப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு நேற்றுக் காலை கடிதம் அனுப்பியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply