விஜயதாச ராஜபக்ஷ அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கம்

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சிலிருந்து பதவி நீக்கம் செய்யும் கடிதம் ஜனாதிபதி செயலகத்தினால் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இன்று காலை ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்யுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் நேற்று ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.

ஜனாதிபதி குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாகவும் அதனை ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷவுக்கும் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply