பிரபாகரனின் இறுவெட்டுகளுடன் சிங்கள விடுதி முகாமையாளர் கைது

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உட்பட ஏனைய புலிகள் இயக்க உயர்மட்ட தலைவர்களின் செயற்பாடுகள் மற்றும் இயக்கத்தின் நடவடிக்கைகள் பற்றிய இறுவெட்டுகளுடன் புறக்கோட்டையிலுள்ள தங்கும் விடுதி(லொஜ்) முகாமையாளராக பணியாற்றும் சிங்கள இனத்தவர் ஒருவர் கடந்த 30 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டதாக புறக்கோட்டை பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மேற்படி இறுவெட்டுகளை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதற்கு தயாராக வைத்திருந்தார் எனப் பொலிஸ் தரப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேகநபர் குறித்த தங்குமிட விடுதியின் முகாமையாளராக பணியாற்றிவரும் அதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராகவும் செயற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளதாக சம்பந்தப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.மேற்படி முகாமையாளர் வைத்திருந்த இறுவெட்டுகளின் உரிமையாளர் ஒரு தமிழர் எனவும் இவரைத் தேடி பொலிஸார் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் மேலும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கூறியுள்ளார்.மேலும் குறித்த தங்குமிட விடுதியை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யாது உத்தரவின்றியே நடத்தப்பட்டு வந்துள்ளது. கைப்பற்றப்பட்ட இறுவெட்டுகளில் பிரபாகரன் உயிரிழந்த தனது சகபாடிகளுக்கு இறுதி மரியாதை செய்யும் காட்சிகள் மற்றும் விமானத்தாக்குதலில் அழிக்கப்பட்ட புலிகள் இயக்க முகாம்களின் காட்சிகள் உட்பட பல்வேறு காட்சிகளை உள்ளடக்கியதாக மேற்படி இறுவெட்டுகள் இருந்தன என பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் பிரபாகரன் தனது உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவது மற்றும் படையணித்தலைவர்களுடன் உரையாடுவது போன்ற காட்சிகளும் மேற்படி இறுவெட்டுகளில் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்த இறுவெட்டுகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காகவே மேற்படி விடுதி முகாமையாளர் சேகரித்து வைத்திருந்துள்ளார். இவர் கண்டியில் வத்தேகம பிரதேசத்தில் வசிப்பவராகும். இவர் தகவல்களின் பேரில் கொழும்பு விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply