அமெரிக்க லாட்டரியில் ஆஸ்பத்திரி பெண் ஊழியருக்கு ரூ.4940 கோடி பரிசு
அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் பகுதியை சேர்ந்த பெண் மாவிஸ் எல் வாங்சிக். இவர் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஊழியராக பணிபுரிகிறார். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.அமெரிக்காவில் ‘பவர் பால்’ என்றழைக்கப்படும் மிக அதிக ஜாக்பாட் தொகையுடன் கூடிய லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்றது. அதில் அவர் வாங்கிய ஒரு லாட்டரி சீட்டு மூலம் ரூ.4940 கோடி ஜாக்பாட் பரிசு கிடைத்தது. இதை அறிந்ததும் வாங்சிக் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
தனக்கு இவ்வளவு பெரிய தொகையுடன் ஜாக்பாட் பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. அந்த தொகையை வைத்து ஏதாவது நல்ல காரியம் செய்ய இருப்பதாகவும் அது குறித்து யோசித்து வருகிறேன் என்றார். அவர் பாஸ்டன் அருகேயுள்ள சிகோபி என்ற நகரில் லாட்டரி சீட்டை விலைக்கு வாங்கினார்.
அவரது குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள் தேதிகள் அடங்கிய எண்ணிக்கையில் தான் லாட்டரி சீட்டை வாங்கினார். அது அவருக்கு ஜாக்பாட் பரிசை பெற்றுத்தந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply