உலகையே அச்சுறுத்திய வடகொரியா : நள்ளிரவில் செலுத்தப்பட்ட ஏவுகணைகள்
வடகொரியா தமது கிழக்கு கடற் பிராந்தியத்தில் பல ஏவுகணைகளைப் பரிசோதனை செய்துள்ளது. வடகொரியாவின் காங்வான் மாகாணத்தில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை 250 கிலோ மீட்டர் தூரம் சென்று கடலில் விழுந்துள்ளது.வடகொரியா நேரப்படி இன்று காலை இந்த சோதனை இடம்பெற்றுள்ளதாகத் தென்கொரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மற்றும் பன்னாட்டு நாடுகளின் கண்டனங்களை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளைப் பரிசோதித்து வருகிறது.
இந்த நிலைமைகளைக் கூர்ந்து அவதானித்து வருவதாக தென்கொரிய இராணுவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.இந்த ஏவுகணை குவாம் தீவை இலக்கு வைத்து ஏவப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் தென்கொரியாவும் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply