குணசீலனுக்கு அமைச்சுப் பதவி கிடைத்தமை மகிழ்ச்சி : ரெலோ தலைவர் செல்வம்

மன்னார் மாவட்டத்திற்கு வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை பதவி கிடைத்தமை மகிழ்ச்சி என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வடக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவியேற்றுள்ள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்திய கலாநிதி ஞா. குணசீலன் தொடர்பில் ரெலோ கட்சியின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மன்னாருக்கு அமைச்சு கிடைப்பதை தான் வரவேற்பதாகவும், கட்சியின் நிலைப்பாடு ஒன்று உள்ளதாகவும் இதுகுறித்து விரைவில் கட்சி ஒன்றுகூடி ஒருமித்த தீர்மானத்திற்கு வருவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, வடமாகாண சபையில் சுகாதார அமைச்சுப் பதவி மன்னார் மாவட்டத்திற்கு கிடைத்தமை வரவேற்கத்தக்கது என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply