நம்பிக்கையில்லாப் பிரேரணை அமைச்சர் ராஜிதவுக்கு ஓர் ஆசீர்வாதம்-அமைச்சர் S.B.
அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை அவரின் அரசியல் பயணத்துக்கான ஓர் ஆசீர்வாதம் என அமைச்சரும் முன்னாள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால், அதற்கு எதிராக ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்களுடன் செயற்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பேருவளைப் பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக கொண்டுவரவுள்ள இப்பிரேரணையில், மாலபே நெவில் பிரணாந்து வைத்தியசாலை மற்றும் சைட்டம் என்பனவும் உள்ளடங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு முறைப்பாடுகளுக்கும் உரியவர்கள் முறைப்பாட்டை முன்வைக்கும் கூட்டு எதிர்க் கட்சியினரே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply