உள்ளூராட்சித் தேர்தல் பின்தள்ளப்படலாம் : மகிந்த தேசப்பிரிய

உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் பின்தள்ளப்படலாம் என்று என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார.உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பிலான சட்டமூலம் சபாநாயகர் கையொப்பமிட்டு உறுதிப்படுத்திய பின்பே நடைமுறைக்கு வரும்.

எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்பாக இந்த சட்ட மூலங்கள் தொடர்பிலான ஆவணங்கள் கிடைக்கும் பட்சத்தில் கல்வி பொது தராதர சாதாரணப் பரீட்சைக்கு முன்பாக தேர்தலை நடத்த முடியும்.

இந்த விடயங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசித்து வருகின்றது – என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply