2020 வரையும் அரசின் ஆயுள் நீடிப்பு

ஐக்­கிய தேசி­யக் கட்சி மற்­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி என்­பன இணைந்து அமைத்­துள்ள தற்­போ­தைய கூட்டு அர­சின் ஆயுள் காலம் 2020ஆம் ஆண்டு வரை நீடிக்­கும் என்­பது உறு­தி­யாகி உள்­ளது. இதற்­கான புதிய ஒப்­பந்­தம் டிசெம்­பர் மாதம் கைச்­சாத்­தா­கும் என்­று பிரதி அமைச்­ச­ரும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மூத்த உறுப்­பி­ன­ரு­மான அஜித் பீ.பெரேரா தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வர­லாற்­றில் முதல் தட­வை­யாக இரு முக்­கிய கட்­சி­க­ளும் ஒன்­றி­ணைந்­துள்­ளன. நாட்­டின் முதன்­மைப் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காணும் நோக்­கு­ட­னேயே ஒன்­றி­ணைந்த கூட்டு அரசு நிறு­வப்­பட்­டது.

நாம் நினைத்­தி­ருந்­தால் அரச தலை­வர் தேர்­தல் நிறை­வ­டைந்த உடனே நாடா­ளு­மன்ற தேர்­தல் நடத்தி தனிக்­கட்­சி­யாக மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெற்­றி­ருப்­போம். 100 நாள் வேலைத்­திட்­டத்­தின் கார­ண­மாக இத­னைச் செய்­ய­வில்லை.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சனே மற்­றும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யில் கூட்டு அரசு இரு வரு­டத்தை கடந்­துள்­ளது. இரு முதன்­மைக் கட்­சி­க­ளுக்­கும் இடை­யில் கைச்­சாத்­தி­டப்­பட்ட ஒப்­பந்­தம் அடுத்த மாதம் நிறை­வ­டை­ய­வுள்­ளது. புதிய ஒப்­பந்­தம் டிசெம்­பர் மாதம் கைச்­சாத்­தா­கும் என்­றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply