சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் என சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

இன்றைய ஆலோசனை கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானங்கள் விவரம்:

* விரைவில் பொதுக்குழுவையும், செயற்குழுவையும் கூட்ட அதிமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு.

* சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவு.

* நிர்வாகிகளை நீக்கியும், புதிய நிர்வாகிகளை நியமித்தும் சசிகலா, தினகரன் அறிவித்த உத்தரவுகள் அனைத்தும் செல்லாது.

* அதிமுகவுக்கு சொந்தமான ஊடகங்களை (நமது எம்.ஜி.ஆர், ஜெயா டிவி) கைப்பற்றவும் நடவடிக்கை.

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆதரவு நிர்வாகிகளை நீக்கி தினகரன் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கி வைத்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply