அரசாங்கம் கடந்த 25 ஆம் திகதி பெரும்பான்மையை இழந்தது : டளஸ்
அரசாங்கத்துடன் உள்ள 17 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கடந்த 25 ஆம் திகதி உள்ளுராட்சி சபைகள் திருத்தச் சட்ட மூல வாக்களிப்பில் கலந்துகொள்ள வில்லையென்பதிலிருந்து அரசாங்கத்துக்குள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை இழக்கப்பட்டுள்ளமை உறுதியாகின்றது என கூட்டு எதிர்க் கட்சியின் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
சோபித்த தேரர் கடந்த அரசியல் மாற்றம் குறித்து கூறும் போது, நாம் சட்டியை சூடாக்கிக் கொடுத்தோம், தற்பொழுது ரொட்டி சுடுவது மாத்திரமே எஞ்சியுள்ளது என்றார். இருப்பினும், சட்டியின் மேல் ரொட்டியுள்ளது. இரண்டு வருடங்களாகியும் சுட்டு முடியவில்லை.
தற்பொழுது ரொட்டியை சட்டியிலிருந்து புரட்டிப் போடும் காலம் வந்துள்ளது. அதனைச் செய்வதற்கான பச்சை விளக்கும் அரசாங்க தரப்புக்குள்லிருந்து எரிய ஆரம்பித்துள்ளது. அரசாங்கம் தற்பொழுது மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை இழந்துள்ளது. விரைவில் நாம் அரசாங்கத்தைக் கவிழ்ப்போம் எனவும் அவர் ஹேஷ்யம் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply