வட கொரியா ஏவுகணை ஜப்பானை கடந்து பறந்தது
வட கொரிய தலைநகரான பியாங்யாங்கிற்கு அருகிலுள்ள சுனான் எனும் இடத்திலிருந்து 5:57 மணியளவில் ஏவப்பட்ட ஏவுகணை1180 கிலோமீட்டர்கள் கடந்து பறந்து பசிபிக் கடலில் விழுந்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. ஜப்பான் பிரதமர் அபே தன் நாட்டு மக்களை பாதுகாக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதாக தெரிவித்தார். ஜப்பானின் கிழக்கேயுள்ள ஹொகைடோ தீவினைக் கடந்து இந்த ஏவுகணை சென்றுள்ளது என்றும் இதுவரை பாதிப்புகள் குறித்து ஏதும் தகவல்கள் இல்லை என்றும் ஜப்பானிய அதிகாரிகள் கூறினர்.
ஏவுகணை ஜப்பானின் கடல் எல்லைக்குள் விழவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியா – அமெரிக்க கூட்டுப்படைப் பயிற்சியினை ஒட்டியே இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே மூன்று நடுத்தர தூர ஏவுகணைகளை வட கொரியா சோதித்தது.
ஏவுகணை சோதனை ஜப்பானின் பாதுகாப்பிற்கு கடும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply