அளவுக்கு அதிகமாக மருந்து கொடுத்து 90 பேரை கொன்ற ஆண் நர்சுக்கு ஆயுள் தண்டனை

ஜெர்மனியில் உள்ள பிரேமேன் நகரைச் சேர்ந்தவர் நீல்ஸ் ஹோயஜெல் (40).இவர் அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஆண் நர்சாக பணி புரிந்தார். அப்போது இவரது கண்காணிப்பில் இருந்த 2 நோயாளிகள் மரணம் அடைந்தனர்.

அதை தொடர்ந்து இறந்தவர்களின் பிணங்கள் பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவர்களுக்கு தேவையின்றி அளவுக்கு அதிகமாக ஊசி மருந்து செலுத்தியதால் அவர்கள் மரணம் அடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே 2 பேரை இவர் கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர். ஆஸ்பத்திரியில் இவரது கண்காணிப்பில் இருந்து மரணம் அடைந்த 120 பேரின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

அவர்களில் 90 பேர் அளவுக்கு அதிகமாக மருந்து பயன்படுத்தப்பட்டதால் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் நீல்ஸ் ஹோயஜெலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply