யாழ் படகு விபத்து : மாணவர்கள் 6 பேரும் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியது
யாழ்ப்பாணம் – மண்டைத்தீவு – சிறுத்தீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி உயிரிழந்த ஆறு மாணவர்களின் மரணத்திற்கான காரணம் யாழ்.பொலிஸாரின் ஆரம்ப கட்டவிசாரணைகளில் இருந்து வெளியாகியுள்ளன.பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாவது, நடைபெற்றுவரும் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 7 மாணவர்கள், அதில் ஒரு மாணவனின் பிறந்த நாளை கொண்டாடும் முகமாக குறித்த கடற்கரைப்பகுதியில் ஒன்று கூடியுள்ளனர்.
குறித்த சமயம் அம் மாணவர்கள் மது அருந்தியிருந்ததால் அதிக மதுமயக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், மாணவர்கள் 7 பேரும் கடற்கரைப் பகுதியில் இருந்த படகொன்றையெடுத்து கடலுக்கள் சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு பழுதடைந்த நிலையில் காணப்பட்டதுடன் அது பயணத்திற்கு ஏற்ற தரத்தைக் கொண்டிராத வள்ளத்திலேயே மாணவர்கள் ஏறி கடலுக்குள் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மணவர்கள் 6 பேரின் மரணத்திற்கு, அவர்கள் பயணித்த படகு உரிய தரத்துடன் இல்லாமையும், குறித்த மாணவர்கள் மதுபோதையில் இருந்தமையுமே காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.இதேவேளை, படகில் ஏறி கடலில் பயணித்த 7 மாணவர்களில் ஒரு மாணவர் மாத்திரம் நீந்திக் கரை சேர்ந்துள்ளார். ஏனைய 6 மாணவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு,
உரும்பிராயைச் சேரந்த 18 வயதுடைய நந்தன் ரஜீவன், உரும்பிராயைச் சேர்ந்த 17 வயதுடைய நாகசிலோஜன் சின்னதம்பி, கொக்குவிலைச் சேர்ந்த 20 வயதுடைய தனுரதன், நல்லூரைச் சேர்ந்த 20 வயதுடைய பிரவீன், உரும்பிராயைச் சேர்ந்த 17 வயதுடைய தினேஷ், சண்டிலிப்பாயைச் சேர்ந்த 18 வயதுடைய தனுசன் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply