புலிகளுக்கு பிரச்சார இறுவட்டு தயாரித்த அறுவர் சென்னையில் கைது
இந்திய அரசியல் தலைவர்களை விமர்சன எல்லைக்கு அப்பாற் சென்று மிக மோசமாக இழிவுபடுத்தும் `காணொளி இறுவட்டு`களை தயாரித்த அறுவரை சென்னை மாநகர காவல் துறை கைது செய்துள்ளது. சென்னையில் கே.கே. நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் புலிகளுக்கு பிரச்சார சிடிக்கள் தயாரிக்கப்படுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
சரவணசுந்தரம் (42), கபிலன் (45), கமலதாசன் (38), பாலசுந்தரம் (27), திவாகரன் (30), சுரேஷ்பாபு (36) ஆகியோர் ஆயிரக்கணக்கான இறுவட்டுக்களுடன் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தயாரித்த இறுவெட்டுகள் முழுவது பறிமுதல் செய்யப்பட்டது. பொலிஸாரால் இவர்கள் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்படு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply