இலங்கைக்கான தனது உயர்ஸ்தானியரை சுவீடன் திருப்பி அழைத்துள்ளது

பிரித்தானிய பிரதமர் அலுவலகம் இரு தினங்களுக்கு (ஏப். 26) முன்பு, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலி பான்ட், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கெளச்சல், மற்றும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் சால்ஸ் பில்ட்ற் ஆகியோர் சிறிலங்காவுக்கான உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் கொழும்பு வருவதற்கான அனுமதியை வழங்கிய இலங்கை அரசாங்கம், சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சரின் வருகைக்கு அனுசரணை வழங்க தாமதிப்பதாக செய்திகள் வெளியாகின.

திட்டமிட்ட படி பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் நாளை (ஏப். 29) கொழும்பு செல்லும் நிலையில், சுவீடன் தனது வெளிவிவகார அமைச்சரின் வருகைக்கு கொழும்பு அனுசரணை வழங்காமைக்கு ஆட்சேபத்தை வெளிப்படுத்த, இலங்கைக்கான தனது உயர்ஸ்தானியரை திருப்பி அழைத்துள்ளதாக சர்வதேச ராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply