கனடாவில் `சிவம் அண்ணா` காலமானார்
எழுபதுகளில் இலங்கையின் வடபுலத்தில் ஆளுமை செலுத்திய மாவோயிஸ்ட்கள் மத்தியில் குறிப்பிடக்கூடிய களப்பணியாளர்களில் ஒருவரான சிவம் அண்ணா கனடாவில் 2009 ஏப்ரல், 27 அதிகாலை மாரடைப்பால் மரணமானார். சாதிய ஒடுக்கு முறையின் கொடுமுடி என்றழைக்கப்படும் வடமராச்சியில் கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட சிவம் அண்ணா சாதி ஒழிப்புப் போராட்டங்களில் ஒரு முதன்மை போராளியாக இருந்து உழைத்தவர்.
இன்றும் பலரால் நினைவு கூரப்படும் தீண்டாமைக்கு எதிரான களப்பணியை கலை இலக்கிய தளங்களில் அசாத்திய வீச்சோடு நிகழ்த்திக் காட்டிய நாட்டுக் கூத்து பாணியில் அமைந்த `கந்தன் கருணை` போன்ற மேடை நிகழ்வுகளில் சிவம் அண்ணாவின் வகிபாகம் குறிப்பிடத்தக்கது.
புலிகளின் பாசிசப் போக்கை 80`களில் அடையாளங் கண்ட அவர் கனடாவுக்கு புலம் பெயர்ந்த பிற்பாடு, தமிழ் சமூகம் இழந்து போன பன்முகப் தன்மையை மீட்டெடுக்க, மாற்றுக் கருத்துகளுக்கான தேடலாக தோன்றிய தமிழர் வகை துறைவள நிலையம் (தேடகம்) உருவாக முன்னின்று பணியாற்றியவர்களில் ஒருவர். நீண்ட காலமாக சிறுநீராக நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்றிருந்தாலும் அதை பொருட்படுத்தாது தன்னால் முடிந்த சமூகப் பணிகளை தொடர்ந்து முன்னின்று செய்தார்.
அன்னாரின் புகழுடல் Ogden Funeral Home (Midland/ Sheppard)ல் 29-04-2009 புதன்கிழமை மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு 30-04-2009 வியாழக்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் 12:00 மணி வரை St. James (Parliament/ Wellesley) மயானத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று தகனம் செய்யப்படும்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply