முசலியில் மீளக் குடியமர்த்தும் பணிகள் ஆரம்பம்.

மன்னார் – முசலி பகுதியிலிருந்து 2007 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் பணிகள் நாளை (ஏப். 30) ஆரம்பமாக உள்ளது. முதற் கட்டமாக 122 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் முசலி – சவரியார்புரம் கிராமத்தில் நாளை குடியமர்த்தப்படுவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அ. நிக்கலஸ்பிள்ளை தெரிவித்தார். இது தொடர்பான நிகழ்வு சவரியார்புரம் விளையாட்டுத் திடலில் நாளை நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

இடம்பெயர்ந்து மன்னார், நானாட்டான் பிரதேசங்களில் தங்கியிருந்து மீளவும் தமது சொந்த வாழ்விடத்துக்கு செல்லும் இந்த குடும்பங்களுக்கும் இரண்டு வாரங்களுக்குத் தேவையான உலருணவுப் பொருள்கள் வழங்கப்படுவதுடன், சேதமடைந்த வீடுகள் திருத்தப்படும்வரை தங்குவதற்கு வசதியாக கூடாரங்கள் வழங்கப்படுவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

இதற்கான உதவிகளை அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் வழங்குவதாகவும் அவர் கூறினார். மக்கள் மீளக்குடியமர்த்தப் படுவ தற்கு முன்னோடியாக, படையி னரால் மீட்கப்பட்ட பிரதேசங்களில் பொலிஸ் நிலைய ங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு கிராம சேவையாளர்களும் நியமனம் செய் யப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்க பட்டதன் காரணமாகவே மீள்குடியேற்றம் தாமதமானதாக தேசத்தை மீளக் கட்டியெ ழுப்பும் அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கே. கே. குமாரசிறி தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டதைப் போன்று வட பகுதியிலும் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடிய மர்த்துவதற்காக 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது ஆறு பிரிவுகளில் கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக மீள்குடியமரும் சவரி யார்புரம் கிராம மக்களின் வாழ் வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விவசாயம், கைத் தொழில் முயற்சிகளுக்கும் உதவி வழங்கப்படுகிறது.

நாளை மீள்குடியமரும் மக்களுக்காக நடைபெறவுள்ள நிகழ்வில் அமைச்சு க்களின் உயரதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் முதலானோர் கலந்துகொள்கின்றனர். 2007 ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்தன.

இந்த மக்களை முழுமையாக மீளக் குடியமர்த்தி அவர்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. மேலும் பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவென உலக வங்கியின் 380 மில்லியன் ரூபா நிதியில் யோதவெவ மீளமைக்கப்படவுள்ளது. அதே நேரம், மதவாச்சி – மன்னார் வீதியும் புனரமைக்கப் படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply