சர்வதேச தரத்திலான சுப்பர் சிறைச்சாலை இன்று திறப்பு

ஹம்­பாந்­தோட்டை அங்­கு­னு­கொ­ல­ப­லெஸ்­ஸவில் சர்­வ­தேச தர நிய­மங்­க­ளுக்கு அமை­வாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள இலங்கையின் முத­லா­வது சிறைச்­சாலை இன்று திறக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இச்சிறைச்சாலை ‘சுப்பர் சிறைச்­சாலை‘ என்று அழைக்­கப்­படுகின்றது. இங்கு சிறைக்­கை­தி­க­ளுக்கும், அவர்களைப் பார்­வை­யிட வரு­ப­வர்­க­ளுக்கும் உயர் சொகுசு வச­திகள் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இப்­பு­திய சிறைச்­சா­லையில் சுமார் 1500 சிறைக்­கை­தி­களை தங்­க­வைக்க முடியும்.

இத்­தி­றப்பு விழாவில் மீள்­கு­டி­யேற்றம் மற்றும் சிறைச்­சா­லைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் , நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள மற்றும் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply