இங்கிலாந்தின் இளம் கோடீசுவரர் ஆன 19 வயது இந்தியர்

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் அக்‌ஷய் ரூபரேலியா. 19 வயதான இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். பள்ளியில் படித்து வருகிறார்.தற்போது இவர் இங்கிலாந்தில் உள்ள இளம் வயது கோடீசுவரர்களில் ஒருவர் ஆகியுள்ளார். இவர் பள்ளியில் படித்துக் கொண்டே ‘ஆன்லைன்’ மூலம் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்கிறார். அவர் ஒரு வருடத்தில் ரூ.1000 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளார். அதன் மூலம் ரூ.120 கோடி லாபம் ஈட்டியுள்ளார்.

தற்போது இவரது ரியல் எஸ்டேட் நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள பெரிய கம்பெனிகளில் 18-வது இடம் வகிக்கிறது. இவர் கடந்த 16 மாதங்களுக்கு முன்பு தான் தனது வியாபாரத்தை தொடங்கினார். அப்போது தனது உறவினர்களிடம் ரூ.7 லட்சம் கடனாக பெற்று ஆரம்பித்தார். இவரிடம் தற்போது 12 பேர் வேலை செய்கின்றனர்.

இவரது தாய் மற்றும் தந்தையும் காது கேளாதவர்கள். அவர்கள் தங்களது மகன் குறித்து பெருமைப்படுகின்றனர். பொருளாதாரம் மற்றும் கணக்கு பாடம் பயில ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு இடம் வழங்க முடிவு செய்துள்ளது. ஆனால் அதில் சேர்ந்து படிப்பது குறித்து அவர் முடிவு செய்யவில்லை. தனது வியாபாரத்தை மேலும் வளர்க்க விரும்புகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply