நேற்றிரவு சம்பவம் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை
தெற்குப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பாரிய சப்தம் மற்றும் தென்பட்ட பிரகாசம் தொடர்பில் மக்கள் பயப்படத் தேவையில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நேற்றிரவு 8.45 மணிக்கும் 9.15 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த அசாதாரண சப்தம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆய்வு நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்நிலையம் அறிவித்துள்ளது.
காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டயிற்கும், களுத்தறை, கொழும்பு பிரதேசத்துக்கும் இந்த சப்தம் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு பல்கலைக்கழக வானியல் துறையின் பேராசிரியர் சந்தன ஜயரத்னவிடம் இது தொடர்பில் கேட்கப்பட்ட போது,
இதற்கு முன்னர் பல்வேறு நாடுகளிலும் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு வின் எரிகல்லாக இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply