நெதர்லாந்தில் உலகின் முதல் 3.டி பிரிண்ட் பாலம்
3.டி பிரிண்டர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நிறைய பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. எந்திர கைகள், மருத்துவ பயன்பாடுகளுக்கான உபகரணங்கள் போன்றவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் தற்போது நெதர்லாந்தில் 3.டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. அது ஸ்மார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் நீளம் மொத்தம் 8 மீட்டர் ஆகும். இது 800 அடுக்குகளால் ஆன பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 40 லாரிகளை ஒரே நேரத்தில் தாங்கும் அளவு வலிமை வாய்ந்தது.
இதன் வாழ்நாள் கான்கிரீட்டில் கட்டப்பட்ட பாலத்தை போன்று அதிகம். இந்த பாலத்தை உருவாக்க 3 மாதம் ஆனது. இதற்கு சாதாரண பாலத்தை உருவாக்கும் செலவில் பாதிதான் ஆனது. இதை வடிவமைத்ததில் தங்களுக்கு பெரும் மகிழ்ச்சி என நெதர்லாந்து என்ஜினீயர்கள் குழு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply