தனிப்பிராந்தியமாகச் செயற்பட ஆரம்பித்துள்ளது வடமாகாணம் :கலகொட அத்தே ஞானசார தேரர்
வடக்கில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எதைப் பேசினாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. வடக்கு தனியொரு பிராந்தியமாகச் செயற்பட ஆரம்பித்துள்ளது. இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தற்காலத்தில் இலங்கையில் பல அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள். எந்தவொரு நாட்டுக்கோ அல்லது நிறுவனத்துக்கோ ஒழுங்கான தலைமைத்துவமொன்று இல்லாதபோது அந்த நாடும் நிறுவனமும் அழிந்து போய்விடும்.
இன்று இலங்கையிலும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் மேலும் பல தலைவர்களும் உள்ளனர்.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர்களான ராஜித சேனாரத்னவும், மங்கள் சமரவீரவும் நாட்டின் தலைவர்கள் போலத்தான் இருக்கின்றார்கள்.
மறுமுனையில் வடக்கில் விக்னேஸ்வரன் எதைப் பேசினாலும் அவருக்கு எதிராக வழக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. வடக்கு தனியொரு பிராந்திய மாக மாறியுள்ளது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply