ஜனாதிபதியுடன் பிரான்ஸ் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்புக்கு வந்த பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குஷ்னர் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார செயலர் டேவிட் மிலிபான்ட் ஆகியோர் இன்று (ஏப். 29) மாலை சந்தித்து உரையாடினர். வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, கலாநிதி பாலித்த கோஹன, ஜனாதிபதியின் மேலதிகச் செயலர் காமினி செனரத், இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் மற்றும் பிரான்ஸ் உயர் அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குஷ்னர் மற்றும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் டேவிட் மிலிபான்ட் ஆகியோர் இன்று வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயந்தோர் தங்கியிருக்கும் முகாம்களுக்கும் விஜயம் செய்தனர்.
செட்டிகுளம் அரச வைத்தியசாலைக்கு அருகில் பிரான்ஸ் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய வைத்தியசாலையையும் அவர்கள் பார்வையிட்டதுடன், அங்கு பணிபுரியும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வைத்திய அதிகாரிகளிடமும் கலந்துரையாடினார்கள். சத்திர சிகிச்சை மகப்பேற்று வைத்தியம் உட்பட பல்வேறு வைத்திய சேவைகளும் இங்கு வழங்கப்படுவதாகவும், இதற்கென நிபுணத்துவம் மிக்க வைத்தியர்கள், தாதியர்கள் ஏனைய வைத்தியர்கள் என 90க்கும் மேற்பட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு பணிபுரிவதாக அங்குள்ள வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply