தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் அரசசார்பற்ற நிறுவன முக்கியஸ்தர்களுடன் கொழும்பில் சந்திப்பு

அரச சார்பற்ற நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டத்தில் அரச சார்பற்ற நிறுவன முக்கியஸ்தர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டதாக ஜீரிஎன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள பல்லாயிரக் கணக்கான மக்களின் நலன்கள் குறித்தும் அவர்களது முகாம்களைப் பார்வையிடுவது குறித்தும் இதில் முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டதாக தெரிய வருகின்றது.

குறிப்பாக பாக்கியசோதி சரவணமுத்து, சாந்தி சச்சிதானந்தம் உள்ளிட்டவர்களும் இந்தியாவின் செஞ்சிலுவைச் சங்கத்தின் முக்கியஸ்தரான திருமதி ராமலிங்கம் என்பவரும் கலந்து கொண்டதோடு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்,  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் தி. சிறீதரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply