விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் இரு ஆண்டுகளுக்கு நீடித்தது இந்தியா

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை இந்தியாவின் விசேட நீதிமன்றம் மேலும் இரண்டு வருடங்களுக்கு அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
விடுதலைப் புலிகள் சட்டவிரோத நடவடிக்கைகளால் ஈடுபட்டால் அவர்கள் மீதான தடை நீடிக்கப்பட வேண்டுமென இந்திய உட்துறை அமைச்சு இந்த வருடம் மே மாதம் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்துக்கு அமைய விடுதலைப் புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் நிரூபிக்கப்பட்டமையால் அவர்கள் மீதான தடையை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதாக விசேட நீதிமன்றத்தின் நீதியாகவிருந்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் அறிவித்தார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பு அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கனடா உள்ளிட்ட நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply