ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கத்தியுடன் திரிந்த மர்ம மனிதனை சுட்டுப் பிடித்த போலீசார்
ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக துப்பாக்கியால் சுடுதல், லாரியை பொதுமக்கள் மீது மோதச் செய்து விபத்து ஏற்படுத்துதல், கத்தியால் தாக்குதல் போன்ற சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் விமான நிலையம், ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில், நெதர்லாந்தின் தலைநகரில் உள்ள ஆம்ஸ்டர்டாம் ஸ்கைபோல் விமான நிலையத்தின் சென்ட்ரல் பிளாசா பகுதியில் மர்ம மனிதன் ஒருவர் கத்தியை வைத்துக் கொண்டு மிரட்டும் வகையில் சுற்றித் திரிந்துள்ளார். இதனைக் கண்ட பாதுகாப்பு போலீசார், அவன் பொதுமக்கள் மீது தாக்குதல் ஏற்படுத்தி விடக்கூடாது எனக்கருதி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவன் படுகாயம் அடைந்தான்.
காயம் அடைந்த அவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நடைபெற்ற உடனே அப்பகுதியில் மக்கள் நடமாட தடைவிதிக்கப்பட்டது. உனடியாக உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் விமான போக்குவரத்து வழக்கமாக இயங்க அனுமதி அளித்தனர்.
இதுகுறித்து போலீசார் ‘‘சுட்டுவீழ்த்தப்பட்டவன் ஏற்கனவே, வன்முறை குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவன்’’ எனத் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply