முதன் முறையாக லண்டன் பிஷப் பொறுப்புக்கு பெண் நியமனம்
கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் இருந்து பிரிந்து 1534-ம் ஆண்டில் தனியாக சர்ச் ஆப் இங்கிலாந்து என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. மிக பழமையான இந்த அமைப்பின் கீழ் இருக்கும் அனைத்து பிஷப்-களும் இதுவரை ஆண்களாகவே இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், லண்டன் பிஷப் பொறுப்புக்கு முதன் முறையாக சாரா முல்லாலி என்ற பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 133-வது பிஷப்-ஆக நியமிக்கப்பட்டுள்ள சாரா, இதற்கு முன்னதாக தலைமை செவிலியராக பணியாற்றியுள்ளார். 2001-ம் ஆண்டு தலைமை செவிலியராக சாரா நியமிக்கப்பட்ட போது, மிக குறைந்த வயதில் அப்பொறுப்புக்கு வந்தவர் என்ற பெயரை பெற்றிருந்தார்.
1994-ம் ஆண்டு முதல் சர்ச் ஆப் இங்கிலாந்து அமைப்பு பெண் மத போதகர்களை நியமித்து வருகின்றது. ஆனால், பழமைவாதிகளின் எதிர்ப்பு காரணமாக பிஷப் பொறுப்புக்கு பெண்களை நியமிக்க முடியாமல் போனது. 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் பெண் பிஷப் நியமிக்க முடிவு செய்யப்பட்ட போது, அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அம்முடிவு தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply