ஐ.நா. பிரதிநிதிகள் படை முகாம்களை பார்வையிடுவது அச்சுறுத்தலாக அமையாது
ஐ.நா. பிரதிநிதிகள் படை முகாம்களை சென்று பார்வையிடுவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் அமையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்படி அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பிரதிநதிகள் வவுனியா முகாமுக்கு சென்று பார்வையிடுவதற்கு எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன, அவ்வாறான அனுமதிகளுக்கு இணங்கியே ஐ.நா. சாசனங்களில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சந்தேகத்திற்கு இடமான முகாம்களில் மனித எலும்புக் கூடுகள் காணப்பட்டமையினாலேயே எந்தவொரு பிரதிநிதியையும் கடந்த அரசாங்கம் முகாம்களுக்கு அனுப்பவில்லை என்றும் நல்லாட்சி அரசாங்கத்தில் வெளிப்படைத்தன்மை சர்வதேசத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply